யாழ். சுன்னாகம் கந்தரோடையில் அமைந்துள்ள யா.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் 22ஆவது ஆண்டு நினைவுப்பேருரை வைபவம் நேற்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9.30அளவில் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கந்தையா உபாத்தியாயர் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கவுரையினை கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா அவர்கள் ஆற்றியதைத் தொடர்ந்து நினைவுப் பேருரையினை தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் நிகழ்த்தினார். நிறைவுரையினை வைத்தியக் கலாநிதி எஸ்.சிவானந்தராஜா அவர்கள் ஆற்றினார். நிகழ்வில் தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா, புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன், வைத்தியக்கலாநிதி எஸ்.சிவானந்தராஜா, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோரும், ஸ்கந்தாவின் பழைய மாணவர்கள், பழைய மாணவர்கள் தாய்ச்சங்க போசகர்கள், அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.