யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யா.வட்டு கார்த்திகேய வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 1.45மணியளவில் பல் ஊடக எயிறி (multimedia Projector) உள்ளிட்ட உபகரணங்களை பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சசிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோகரன்;, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்புச் செயலாளர் அ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.