புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் திரு. கோகுலவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்புச் செயலாளரர் அ.கௌதமனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் பாடசாலையைக் காண்பித்து அங்குள்ள குறைபாடுகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார். இக் றைபாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதன்போது தெரிவித்தார்.