தென்னிலங்கை இளைஞர்கள் உமாமகேசுவரன் நினைவாலயத்திற்கு விஜயம்.! (படங்கள் இணைப்பு)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவிற்கு மொனராகலை விபில பகுதியிலிருந்து வருகை தந்துள்ள 30 இளைஞர் யுவதிகள் 13/10/2018 அன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் அமைப்பின் செயலதிபர் தோழர் அமரர் க.உமாமகேசுவரன் அவர்களின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது அவர்களை புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தற்போதைய நகர சபை உறுப்பினருமான கௌரவ சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான கௌரவ சுந்தரலிங்கம் காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செட்டிகுளம் பிரதேச இளைஞரணி இணைப்பாளரும் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ சுஜீவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா நகர பிரதேச இளைஞரணி இணைப்பாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான திரு பி.கெர்சோன் (கரிஸ்) ஆகியோர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் விஜயத்தின் போது சம கால அரசியலில் கட்சியின் செயற்பாடு குறித்தும், இளைஞரணியின் செயற்பாடு குறித்தும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலமாக கடந்த காலங்களில் செயற்பட்ட விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக கடந்த காலங்களில் செயற்பட்ட கௌரவ சுந்தரலிங்கம் காண்டீபன் தனது அரசியல் பிரவேசத்தில் இளைஞர் கழகத்தின் பங்களிப்பை எடுத்துரையாற்றியதுடன்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராக கடந்த காலங்களில் செயற்பட்ட செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சுஜீவன் அவர்கள் தமது கழகத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடிய பின்னர், மாலை நேர விருந்துபசாரத்துடன் இளைஞர்கள் மாலை 5.00 மணியளவில் தரணிக்குளம் நோக்கி பயணமாகியமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
ஊடக பிரிவு – இளைஞரணி DPLF/PLOTE
வவுனியா.