யாழ். அராலி சரஸ்வதி மகாவித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று (16.10.2018) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் சபாரத்தினசிங்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் நடனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. பாடசாலையின் நிறுவுனர் நினைவுப் பேருரையினை முன்னாள் உப அதிபர் அம்பலவாணர் அவர்கள் நிகழத்தியதைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும், கௌரவிப்பும், சாதனையாளர்கள் கௌரவிப்பும், இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.