யாழ். விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் இன்று (18.10.2018) வியாழக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் இரத்தினம் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி பிரதேசசபையின் உதவி தவிசாளர் செல்வரத்தினம் மயூரன் ஆகியோரும், மதிப்புறு விருந்தினர்களாக வீரகத்தியார் காசிநாதர், வைத்திலிங்கம் கிரு~;ணபிள்ளை, கந்தையா நாகலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more