யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களும், அக் கிராமத்திலிருந்து ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற சுமார் 30 ஆசிரியர்கள் ஆலய முன்றலில் இருந்து மங்கள வாத்தியங்களின் இசையுடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து ஆசிரியர்கள் விருந்தினர்களால் நினைவுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு கலைநிகழ்வுகளும், பட்டிமன்றமும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.