யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் சங்கத்தின் தலைவர் திருமதி மைதிலி சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், உடுவில் பிரதேச செயலர் சிவராஜசிங்கம் ஜெயகாந், வடமாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலர் ஆர்.உமாகாந்தன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப்  பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ், மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன், வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன்,

வலிதெற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.உமாபாலன், கிராம உத்தியோகத்தர் ஏ.றஜீவன், வாழ்வகத்தின் தலைவர் ஆ.இரவீந்திரன், சனசமூகநிலைய தலைவர் செ.செல்வராசா, முத்தமிழ் மன்ற தலைவர் நா.இலட்சுமிகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு மங்கல வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டனர்.

புதிய கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்ததைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், தேவாரம், வரவேற்புரை என்பன இடம்பெற்று ஆசியுரையினை சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் நிகழ்த்தினார். விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றதைத் தொடர்;ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன், 2017ல் தேசிய மட்டத்தில் தரம் 1ற்கான கதாபிரசங்கத்தில் 1ம் இடத்தைப் பெற்ற அறநெறி மாணவன் கிருபாகரன் டிலக்சன் கௌரவிக்கப்பட்டார். மேலும், புலம்பெயர் உறவுகளின் உதவியில் அறிநெறி மாணவிகளான செல்வி வசந்தகுமார் பிரியதர்சினி, செல்வி அரிதாஸ் அஸ்வினி ஆகியோர்க்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. இறுதியாக அறிநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.