யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களும், விசேட விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி இ.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பூநகரி பிரதேச செயலாளர் ச.கிரு~னேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று, விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு மங்கல இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மன்றக் கட்டிடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வைபவ ரீதியாக திறந்துவைத்தார். இதனையடுத்து மங்கள இசை, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், அகவணக்கம், மன்றக் கொடியேற்றல், மன்ற கீதம் இசைத்தல் வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ சி.ஜெயானந்தசர்மா அவர்கள் ஆசியுரையினை நிகழ்த்தினார். தலைமையுரையினையடுத்து பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மலர் வெளியீடும் சிறப்பு பிரதிகள் வழங்கலும், விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. அத்துடன் மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் பவள விழாவினை முன்னிட்டு நடாத்தப்படட போட்டிகளுக்கான பரிசில் வழங்கலும், சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெற்றன.