ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுமாலை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர். புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு, கங்காராம விஹாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.