பாரதூரமான மனித படுகொலைகளை செய்தவர்களையும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சலையில் இல்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தண்டனை உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் நீதிப் பொறிமுறைக்கு அப்பால் இவர்களை விடுதலை செய்ய மாற்று வழிமுறை இருந்தால் தமிழ் தலைமைகள் அதனை எமக்கு கூறுங்கள், அது சாத்தியம் என்றால் கைதிகளை விடுதலை செய்ய முழுமையான ஒத்துழைப்பை தருகின்றோம் என்றார்.