Header image alt text

உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் கூட்டத்தொடர் பிற்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை கூடவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமரின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read more

பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். Read more