பாராளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து அலரி மாளிகையில் தற்போது விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பு தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.