Header image alt text

இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துள்ளார். சீனத் தூதுவராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையை ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகைiயில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுகின்றனர். Read more