ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையை ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகைiயில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுகின்றனர். இராஜதந்திரிகள் அரசியல் தரப்புக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து வருகின்ற நிலையிலேயே அவரது பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் வெட்கமடைவதாக, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.