Header image alt text

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (28.10.2018) சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கென 40,000 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக கடந்த 01.09.2018 அன்று பூநகரி, கிராஞ்சியில், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டபோது, Read more

மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று (29) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி. சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டிருந்த வடமாகாண ஆளுனர் ரெஜினோலட் குரே, மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை உடனடியாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். Read more

பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே, அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இரவு சென்றிருந்த போது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. Read more

அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, டிலான் பெரேரா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

மிக விரைவாக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற வழி அமைத்து கொடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாக செயற்படுமாறும் குறித்த கடிதத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் அண்மைக் கால நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார். Read more

வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினர் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல், உறக்கத்தில் இருந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வடமராட்சி, குடத்தனையில் இன்று அதிகாலையில் 4.30 மணியளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 50 வயதுடைய எம். சித்திரவடிவேல் என்பவரும் 40 வயதுடைய அவரது மனைவியான ஜெயந்தி என்பருமே படுகாயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

கொழும்பு 09, தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவருள் ஒருவர் நேற்று மாலை 6.45 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை பெற்றோலிய கூட்டுதாபன வளாகாத்துக்கு வருகை தந்தபோது பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். Read more

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சரத் கோன்கஹ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பதில் தலைவராக வசந்த பிரியா ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் சட்டரீதியான பிரதமர் எனவும், அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமக்கு மிகவும் தேவையாக உள்ளது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் சட்டத்தை ஓரமாக வைத்து விட்டு அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியுள்ளார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு மக்களுக்காக நேற்றுமாலை ஆற்றிய உரையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சரியான நிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பவற்றை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.