அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, டிலான் பெரேரா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல் சபையானது நேற்று (28) இரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றிரவு 7மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது.

அமைச்சரவையில், 10 பேர் அடங்கிய ஒருதொகுதி மட்டுமே, பதவியேற்றுக்கொள்ளவுள்ளது, அதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரியவருகின்றது. இதேவேளை, புதிய அரசாங்கத்தில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.