கொழும்பு 09, தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவருள் ஒருவர் நேற்று மாலை 6.45 மணியளவில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை பெற்றோலிய கூட்டுதாபன வளாகாத்துக்கு வருகை தந்தபோது பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.