கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (28.10.2018) சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கென 40,000 ரூபா நிதியினை வழங்கியிருந்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக கடந்த 01.09.2018 அன்று பூநகரி, கிராஞ்சியில், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டபோது, பூநகரி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உதவி நேற்று வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம், FEED தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஐ.யசோதரன் ஆகியோர் மேற்படி சீருடைகளை கையளித்தார்கள். நிகழ்வில் வேரவில் மற்றும் கிராஞ்சி பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுக் கழக இளைஞர்கள் கலந்துகொண்டனர்.