ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இலங்கையின் சட்டரீதியான பிரதமர் எனவும், அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதெனவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமக்கு மிகவும் தேவையாக உள்ளது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் சட்டத்தை ஓரமாக வைத்து விட்டு அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியுள்ளார்.இது சட்டத்துக்கும், அரசமைப்புக்கும் எதிரானது. எமக்கு கட்சியை விட நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் வெளியே வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.