Header image alt text

அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் வசித்து வரும் வைத்திய கலாநிதிகள் உள்ளடங்கிய அமைப்புடனான சந்திப்பான்றில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் அவர்கள் அதனைத் தொடர்ந்து கனடாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், வட கிழக்கில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு மற்றும் இனம், மத விஸ்தரிப்பிற்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தார்மீக ஆதரவைக் கோரும் வகையிலும் கனடா வாழ் மக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது நாளை (30.10.2018) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள சங்கமம் விருந்துபசார மண்டபத்தில் (Sankkamam Party Hall, 42 Tuxedo ct, Scarborough, Ontario, M1G 3S3.) நடைபெறவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்தே, ஊழியர்கள் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மோட்டார் குண்டுகள் பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக அரலகங்வில விஷேட அதிரடி படையினருக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி நேற்று 12 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,

அமைச்சர்களின் விபரம் Read more

சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் நேற்று வரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமானப்பணியின் போது அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. Read more

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபணத்தின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதி மன்றில் ஆஜர்படுத்த போது அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.