அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் வசித்து வரும் வைத்திய கலாநிதிகள் உள்ளடங்கிய அமைப்புடனான சந்திப்பான்றில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் அவர்கள் அதனைத் தொடர்ந்து கனடாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், வட கிழக்கில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு மற்றும் இனம், மத விஸ்தரிப்பிற்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தார்மீக ஆதரவைக் கோரும் வகையிலும் கனடா வாழ் மக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது நாளை (30.10.2018) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள சங்கமம் விருந்துபசார மண்டபத்தில் (Sankkamam Party Hall, 42 Tuxedo ct, Scarborough, Ontario, M1G 3S3.) நடைபெறவுள்ளது.