பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மோட்டார் குண்டுகள் பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக அரலகங்வில விஷேட அதிரடி படையினருக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மோட்டார் குண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் அவை யுத்த காலத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.