விழிநீர் அஞ்சலி தோழர் ரமேஸ் அவர்கட்கு
விழிநீர் அஞ்சலி தோழர் ரமேஸ் அவர்கட்கு
Posted by plotenewseditor on 17 October 2018
Posted in செய்திகள்
யாழ். அராலி சரஸ்வதி மகாவித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று (16.10.2018) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் சபாரத்தினசிங்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் நடனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. Read more
Posted by plotenewseditor on 16 October 2018
Posted in செய்திகள்
அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சி.வி. அறிவிப்பு?
வட மாகாண சபையின் இறுதி அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதன் மறுநாள் 24 ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் மக்கள் சந்திப்பு ஒன்று கூடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், Read more
Posted by plotenewseditor on 15 October 2018
Posted in செய்திகள்
தென்னிலங்கை இளைஞர்கள் உமாமகேசுவரன் நினைவாலயத்திற்கு விஜயம்.! (படங்கள் இணைப்பு)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவிற்கு மொனராகலை விபில பகுதியிலிருந்து வருகை தந்துள்ள 30 இளைஞர் யுவதிகள் 13/10/2018 அன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் அமைப்பின் செயலதிபர் தோழர் அமரர் க.உமாமகேசுவரன் அவர்களின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 12 October 2018
Posted in செய்திகள்
சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், தொடர்ந்து 29நாட்களாக அவர்கள் உண்ணாவிரதமிருப்பதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிரந்தர உடல் பாதிப்புகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம் போதகர் சக்திவேல் அவர்களின் ஊடாக கேட்பதோடு, வெளியே இருக்கக்கூடிய சிவில் சமூகம் அவர்களின் சார்பில் இப்போராட்டத்தை முன்னெடுத்து அவர்களின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 12 October 2018
Posted in செய்திகள்
புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
பாடசாலையின் அதிபர் திரு. கோகுலவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்புச் செயலாளரர் அ.கௌதமனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் பாடசாலையைக் காண்பித்து அங்குள்ள குறைபாடுகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார். இக் றைபாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதன்போது தெரிவித்தார்.
Read more
Posted by plotenewseditor on 12 October 2018
Posted in செய்திகள்
யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யா.வட்டு கார்த்திகேய வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 1.45மணியளவில் பல் ஊடக எயிறி (multimedia Projector) உள்ளிட்ட உபகரணங்களை பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சசிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோகரன்;, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், Read more
Posted by plotenewseditor on 11 October 2018
Posted in செய்திகள்
யாழ். சுன்னாகம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்கான வேலைகள் இன்று (11.10.2018) வியாழக்கிழமை காலை 8.00மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன. மேற்படி சனசமூக நிலையத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்றிருந்தது. அதன்பிறகு அதன் மிகுதி வேலைகள் நடைபெறாதிருந்தன.
இந்நிலையில் நிறைவுபெறாதுள்ள சனசமூக நிலையக் கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து 5லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். இதன்கீழ் இன்று கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 11 October 2018
Posted in செய்திகள்
யாழ். சுன்னாகம் கந்தரோடையில் அமைந்துள்ள யா.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் 22ஆவது ஆண்டு நினைவுப்பேருரை வைபவம் நேற்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9.30அளவில் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கந்தையா உபாத்தியாயர் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் தொடக்கவுரையினை கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா அவர்கள் ஆற்றியதைத் தொடர்ந்து நினைவுப் பேருரையினை தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் நிகழ்த்தினார். நிறைவுரையினை வைத்தியக் கலாநிதி எஸ்.சிவானந்தராஜா அவர்கள் ஆற்றினார். நிகழ்வில் தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா, புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், Read more
Posted by plotenewseditor on 10 October 2018
Posted in செய்திகள்
யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற முன்னாள் அதிபர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை ஆற்றவந்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்
பேருரை நிகழ்த்தியபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினருடன் சுன்னாகம் தபால் நிலையத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அமைச்சரின் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள (261லட்சம் ரூபாய்) தபால் நிலையத்திற்கான அமைவிடத்தினை நேரில் பார்வையிட்டதுடன், சுன்னாகம் தபால்நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன் உள்ளிட்ட தபால்நிலைய ஊழியர்கள், சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். Read more