Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அமைப்பின் அரசியல் பிரிவு) முப்பது ஆண்டு நிறைவு விழா (முத்துவிழா)  கனடாதேசத்தில் உள்ள  ஒன்ராறியோ மாநிலத்தில். Read more

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

இதற்கமைய, Mrs. Alaina Teplitz ஐக்கிய அமெரிக்கா, Mr. Akira Sugiyama ஜப்பான், Mr. Eric Lavertu  பிரான்ஸ் மற்றும் Mr. Ashraf Haidari ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தூதுவர்கள் நற்சான்றுகளை கையளிக்கும் நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார். இச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தினை பேணுதல் மற்றும் பலப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் ஆதரவினை மீண்டும் வழங்குவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் மக்களின் விருப்பம் மற்றும் அரசியலமைப்பின்படி அமைதியான மற்றும் இணக்கமான முறையில் முடிவடையும் என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தை நவம்பர் 5ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக 5 ஆம் திகதி கூட்டப்படும் பாராளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள அவசர கலந்துரையாடலுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்காகவே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று சந்திப்பை நடத்தியுள்ளார். இதில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது அமைச்சரினால் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதேநேரம் கடந்த தினம் இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி சந்தித்து, தற்போதைய நாட்டு நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உருவாகியுள்ள முன்னொருபோதும் இல்லாதநிலை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் எல்டெர்ஸ் அமைப்பு இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் மிக மதிக்கப்படும் மூத்த அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியதே எல்டெர்ஸ் அமைப்பு. தென்னாபிரிக்காவின் முன்ளாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இந்த அமைப்பை ஆரம்பித்திருந்தார். இலங்கையின் அரசியல் தலைவர்களை சட்டத்தினை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள எல்டெர்ஸ் அமைப்பு மனித உரிமைகள் ஜனநாயகக் கொள்கைகளிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹன்னா சின்கர், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மார்கியு, பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவ்ரிஸ், கனடா தூதுவர் டேவிட் மெக்கினோத், ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொதட் உள்ளிட்ட பிரதிநிதிகள் சபாநாயகரைச் சந்தித்துள்ளனர். Read more