Header image alt text

பத்திரிகை அறிக்கை

Posted by plotenewseditor on 2 November 2018
Posted in செய்திகள் 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஐயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை.

இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது. அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.
Read more

பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7ம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். நவம்பர் 16ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்தபோதும் தன்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் பின்னர் பாராளுமன்றத்தை 7ம் திகதி கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவரை எதிர்வரும் 9ம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பிலேயே அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குடாரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று இரவு, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளாரென்றுத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஐ.நா பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்றுக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118பேர் கைச்சாத்திட்ட யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.