முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னரும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.