18 வயதுக்கு மேற்பட்டோரின் பெயர்களை 4 மாதங்களுக்கு ஒரு தடவை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்வதற்குத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த பெரும்பாலானோர், தமது 19 வயதிலேயே முதல் வாக்கைப் பதிவுசெய்கின்றனர்.

இதைத் தவிர்ப்பதற்காகவே, 4 மாதங்களுக்கு ஒரு தடவை 18 வயது பூர்த்தியடைந்தோரின் பெயர்களை இடாப்பில் உள்ளடக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில், உரிய தரப்பினரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.