Header image alt text

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும்  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 05.11.2018 மாலை 4.00மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் விளக்கிக் கூறிய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகள், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டை அவரிடம் வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

மேலும் 6 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதய கம்மன்பில புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஊ.டீ.ரத்நாயக்க தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எஸ்.எம். சந்திரசேன பெருந்தோட்டத்துறை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஆ.டு.யு.ஆ ஹிஸ்புல்லா நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சராகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தகம், நுகர்வோர் விவகாரம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். Read more

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கி கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் வெள்ள நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றுகாலை வரையில் மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பிரதேச செயலர்களுடைய கண்காணிப்பில் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. Read more