Header image alt text

இலங்கை அரசியலில், இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்றுகாலை 10 மணியலவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என கலந்து கொண்டனர். Read more

இலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்த நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. Read more

இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இராஜாங்க திணைக்களம் இதன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த அர்ப்பணிப்புள்ள சகா என்ற அடிப்படையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு ஜனநாயக ஸ்தாபனங்களும் ஜனநாயக நடைமுறைகளும் மதிக்கப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் என இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்ற கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்பே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவேளை சிறிசேன அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. Read more

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான பேரம்பலம் வசந்தகுமார் என்பவரது வீட்டை உடைத்து ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more