இலங்கை அரசியலில், இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், இலங்கையில் அரசமைப்புக்கு ஏற்பவே, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உறுதியாக நம்புவதாகவும் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில், எந்நேரமும் அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.