வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்றுகாலை 10 மணியலவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ் மற்றும் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து என பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை ஏந்தியவாறு போரட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.