Header image alt text

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் தோட்டவெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி அக்கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான சிறுவர்கள் இருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த இரு சிறுவர்களும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 7வயதுடைய கனகராஜ் ரஜீத் மற்றும் 7 வயதுடைய இந்தயூட் லிவிசன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இரு சிறுவர்களும் நேற்றுமாலை தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். Read more

பாராளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானியூடாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 33 ஆவது அதிகாரத்தின் இரண்டாம் பிரிவின் ஏ உப பிரிவு, 62 ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் உப பிரிவு, 70 ஆவது அத்தியாயத்தின் ஐந்தாவது உப பிரிவு ஆகியவற்றின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, 6 அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு, இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர். Read more

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களுக்கு பயப்படும் கட்சி அல்லவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 113 பெரும்பான்மை இல்லாமல் நாம் அல்ல நாடாளுமன்றத்தைக் கலைத்தது. நாம் இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று, மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டிய பிறகு மீண்டும் இந்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். Read more

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தின் மத்திய, தென் கிழக்குத் திசையில் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை மேலும் விரிவுடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அல்லது இரவு வேளையில் இந்தத் தளம்பல் நிலை, சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more