நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, 6 அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு, இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கும் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி மேலும் கூறியுள்ளார்.