எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தின் மத்திய, தென் கிழக்குத் திசையில் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை மேலும் விரிவுடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அல்லது இரவு வேளையில் இந்தத் தளம்பல் நிலை, சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால், நாளை மறுதினம் முதல் வங்காள விரிகுடாவின் மேற்கு, மத்திய மற்றும் தென்மேற்கு கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை, வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தின் மத்திய, தென்கிழக்கு திசையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.