Header image alt text

பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், கால அவகாசம் கோரப்பட்டதையடுத்தே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. Read more

யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலாளரும் சிவில் பாதுகாப்புக்குழு தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்தக் கூட்டம் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் பொலிஸாருக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன. Read more

குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 47 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாயக்கை குளத்தில் குழிப்பதற்கு தடை விதிக்குமாறு பாரதி சன சமூக நிலையத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். Read more

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி நிலைமைகளை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து பெரும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். Read more

தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு சிலர் முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவதற்கான யுத்தத்தில் வெற்றிபெற்றது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கூறுகின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நிமித்தம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.

‘தேசிய தலைவர் தமிழ் செல்வன், எழிலன் போன்றவர்களை அரசியலுக்கு இனங்காட்டி இருக்கிறார். அப்படிப்பட்ட போராளிகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும். சகல தரப்பில் இருந்தும் சாதாரண கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்த வேண்டும். Read more

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி கள­மி­றங்­க­வுள்­ளது. இதற்­கான முன்­னேற்­பா­டு­களில் அந்தக் கட்சி ஈடு­பட்­டுள்­ள­துடன் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்தார். வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே இந்த அறி­விப்பு வெளியி­டப்­பட்­டி­ருந்­தது. Read more

அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு நபரும் அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் அமைச்சர்களும், Read more