குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 47 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாயக்கை குளத்தில் குழிப்பதற்கு தடை விதிக்குமாறு பாரதி சன சமூக நிலையத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சடலம் பிரோ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.