எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கூறுகின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நிமித்தம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.

‘தேசிய தலைவர் தமிழ் செல்வன், எழிலன் போன்றவர்களை அரசியலுக்கு இனங்காட்டி இருக்கிறார். அப்படிப்பட்ட போராளிகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும். சகல தரப்பில் இருந்தும் சாதாரண கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்த வேண்டும். அப்படிப்பட்வர்களைத் தான் எமது கட்சி இனங்கண்டுள்ளது. இப்போது இருக்கும் தமிழ் தலைமைகளும் புதிய இளம் தலைமைகளுக்கு இடம்விட்டு, தேர்தலுக்கு முகம் கொடுக்க வெண்டும். அதன் மூலம் தான் ஐ.நா தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்ற வழிவகுக்கும். எமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும்.’ இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமது கட்சி சுயேட்சையாகவே களமிறங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.