Header image alt text

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பம் இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நிதியரசர் நலின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான பிரசன்ன ஜனவர்தன மற்றும் ப்ரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இடைக்காலத் தடையுத்தரவு இன்றுமாலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதிவரை செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் 13 மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. Read more

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் மனோ தித்தவெல, இராஜினாமா செய்துள்ளனர் என்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து உதவி மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (15), கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனுக்கள் தொடர்பான யோசனைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டமொன்று நடைபெறவுள்ளது. Read more

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடமும் எழுத்து மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வார காலத்திற்குள் கட்சிகளின் நிலைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின் அவர்கள் 13 பேருக்கும் மரண அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் அதனால் பாதுகாப்பு நோக்கத்திற்காக சுற்றுலா விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளனர். Read more

ஜப்பானில் தொழிலில் ஈடுபட்டுள்ள உயர் தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் முதியோரின் எண்ணிக்கை கூடியுள்ளதே இதற்கான காரணமாகும். இதனடிப்படையில் அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. Read more

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார்.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுடன் இரவு தூங்கிக்கொண்டு இருந்தவேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளி, சிறுமியை கடத்தி சென்று வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்த கேணியடியில் வைத்து சிறுமியை வன்புணர்ந்து உள்ளார். Read more

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 104வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் 105வது தடவை அகழ்வு பணியானது நேற்றைய தினம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அகழ்வு பணியானது இடம் பெறவில்லை. அத்துடன் எதிர்வரும் இருவார காலங்களுக்கு குறித்த அகழ்வு பணியானது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. Read more

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக மின்சார சபை ,மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. Read more