ஜப்பானில் தொழிலில் ஈடுபட்டுள்ள உயர் தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் முதியோரின் எண்ணிக்கை கூடியுள்ளதே இதற்கான காரணமாகும். இதனடிப்படையில் அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதலாவது பிரிவு திட்டத்தின் கீழ் 3 வருட காலம் தொழிற்பயிற்சி மற்றும் ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானோருக்கு 5 வருட கால வதிவிட விசா வழங்கப்படும். அத்தோடு இவ்வாறானோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இது செல்லுபடியாகாது.

இதேபோன்று 5 வருட கால விசா காலத்தை கொண்டுள்ள பணியாளர்களுக்கு 10 வருட காலம் வரை அந்நாட்டில் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிட்டும். இந்த பணியாளர்களுக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் வதிவிட வசதி வழங்கப்படும். விவசாயம், தாதி, பராமரிப்பு சேவை, உணவு பொருள் தயாரிப்பு, கட்டிட நிர்மாணம் மற்றும் கப்பல் இயந்திர உபகரணங்கள், உணவு சேவை கடற்தொழிற்துறை தயாரிப்பு தொழிற்சாலை இலத்திரனியல் மற்றும் மின்சார உபகரணங்களுக்கான தொழிற்துறை வாகனங்கள் தொடர்பான சேவைகள், விமான சேவை போன்ற தொழிற்துறைகளுக்காகவும், சுற்றுலாத்துறைக்கான சேவைகள், தொழிற்துறைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும்.

மேலும் இருப்பிட வசதிகளும் வழங்கப்படும். இரண்டாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு ஜப்பானில் தங்கியிருக்க கூடிய குறிப்பிட்ட காலவரையை இடம்பெறாது. இவ்வாறான பணியாளர்களுக்கு நிரந்தர வசதி வழங்கப்படுவதுடன் இவ்வாறானோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜப்பானில் தங்கியிருக்க கூடிய வசதிகளும் கிட்டும்.

பல்வேறு நாடுகளில் குடிவரவு, குடியகல்வு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுவதனால் குடும்ப உறவினர்களுக்கு ஜப்பானுக்கு வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு முறை விசா அனுமதிப்பத்திரம் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் பாரிய சம்பவங்கள் தொடர்பான அறிக்கை இடம்பெற்றால் விசா அனுமதி பாத்திரத்தை ரத்து செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஜப்பானில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவரை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பிரஜைகளினதும் ஜப்பான் அகதிகள் கொள்கையை மீறிய வகையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளின் நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது. வெளிநாட்டு பணியாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் சேவை வழங்குவோரின் அல்லது வேறெந்த நிறுவங்களின் மூலம் அவர்கள் ஜீவனோபாயத்துக்கான வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறானோரின் சம்பளம் ஜப்பான் பணியாளர்களின் சம்பளத்துக்கு சமமாக அமைந்திருக்கும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)