எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடமும் எழுத்து மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வார காலத்திற்குள் கட்சிகளின் நிலைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் அதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.