இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின் அவர்கள் 13 பேருக்கும் மரண அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் அதனால் பாதுகாப்பு நோக்கத்திற்காக சுற்றுலா விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள் பென்-குரியன் விமான நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவர்களுக்கு இல்லாத காரணத்தினால் அவர்களுக்காக முன்வந்த ஒருவர் உட்பட 11 பேரும் இரு பெண்களும் இஸ்ரேல் தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரண்டு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஆடை மாற்றுவதற்கோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கோ வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு மருத்து வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் சிறுநீரக நோய்குள்ளான நபர் ஒருவருக்கு நோய் நிலமை அதிகரித்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களை சிறைக்கு அழைத்து செல்லும் போது அதில் ஒருவர் இஸ்ரேலில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் இவர்கள் 13 பேரையும் வழங்கறிஞர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.