பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குவதாகவும், அதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியேறியிருந்தார்.