Header image alt text

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை எனவும் எதிர்வரும் தேர்தல்களிலும் ரணில் விக்ரமசிங்க கட்சியை தலைமை தாங்குவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமை பதவியை ஏற்றுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். Read more

வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 30 அமைச்சுகளுக்கு, மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் முகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமையவே, 30அமைச்சுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் நகர பிதா தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்தார்.

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையம் இன்றையதினம் காலை மீள்புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் வவுனியா நகரசபை தலைவர் உட்பட பலருக்கு தகவலை தெரிவித்திருந்த போதிலும் எவருமே பல மணிநேரமாக அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை. Read more