தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை எனவும் எதிர்வரும் தேர்தல்களிலும் ரணில் விக்ரமசிங்க கட்சியை தலைமை தாங்குவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமை பதவியை ஏற்றுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனினும், கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குமாறு கோரி கட்சியில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.