Header image alt text

மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய தமிழருவி 2018 இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்றுமாலை 3.00மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மொரட்டுவை பல்கலைக்கழக உபவேந்தர் K.K.C.K பெரேரா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

ஜனாதிபதிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைய முறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இதன்போது அறிவித்துள்ளன. உரிய நடைமுறைக்கு அமைவாகவே ஏற்கனவே இரு தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. Read more

இன்றுமாலை அனைத்துக் கட்சி மாநாடொன்றை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியினர் பங்குகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள அனைத்துக்கட்சி மாநாட்டில் தமது கட்சி பங்குகொள்ளப்போவதில்லையென ஜேவிபி தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜேவிபி குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் இன்று இடம்பெறும் அனைத்துக்கட்சி மாநாட்டில் தாங்கள் பங்குகொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more

பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்றுமாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனுமான கருத்துப் பரிமாறல் இடம்பெற வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, இதுவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைத்துள்ளன. Read more

மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உரிய முறையில் கடமையை செய்யவில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கலமோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புலவுக்காணியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி கட்டுக்கரை குள முகாமைத்துவக்குழு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். Read more

யாழ். வடமராட்சி இமையாணன் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இமையாணன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தினுள் நுழைந்த ஆயுததாரிகள், வர்த்தக நிலையத்தை கொள்ளையிடுவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேகநபர்களே வாள்களைக் கொண்டு அச்சுறுத்தியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்திலுள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read more