பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்றுமாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பில் ஜனாதிபதிக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் இடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனுமான கருத்துப் பரிமாறல் இடம்பெற வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் சபாநாயரக் கலந்துகொள்ளமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.