Header image alt text

PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்தும், இவ்வாறான சமூக வலைத்தளங்கள் இயங்குமாயின், அதன்மூலம் முன்வைக்கப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் எவற்றிற்கும் கழகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில், கழகத் தலைமையின் அனுமதியின்றி, PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களை சம்பந்தப்படுத்தி இயங்கும் சமூக வலைத்தளங்களோடு கழக உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விடயங்கள் பற்றிய தீர்மானம் கடந்த 04.11.2018 அன்று வவுனியாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்றுபிற்பகல்1மணியளவில் நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் Read more

பாராளுமன்றத்தை கொண்டுநடத்த தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே எம்மை அரசாங்கமாக அங்கீகரித்து தெரிவுக்குழுவில் எமக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று திங்கட்கிழமை பாராளுமன்றம் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவித்தலை விடுத்த பிரதி சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்தின் தீர்மானத்தை வெளியிட்டார். அதன்போது பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் தத்தமது பெயர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்குமாறு தெரிவித்தார். Read more

எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச் சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியேயுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த மற்றைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தம்முடன் இணையுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். ஏதேனுமொரு கட்சிக்கு சார்பாக அந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படலாம் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more