பாராளுமன்றத்தை கொண்டுநடத்த தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே எம்மை அரசாங்கமாக அங்கீகரித்து தெரிவுக்குழுவில் எமக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று திங்கட்கிழமை பாராளுமன்றம் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவித்தலை விடுத்த பிரதி சபாநாயகர் கட்சி தலைவர் கூட்டத்தின் தீர்மானத்தை வெளியிட்டார். அதன்போது பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் தத்தமது பெயர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்குமாறு தெரிவித்தார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் தினேஷ் குணவர்தன:- பாராளுமன்றத்தை கொண்டுசெல்ல தெரிவுக்குழு அவசியம். ஆகவே எம்மை அரசாங்கமாக என்றுக்கொள்வதுடன் தெரிவுக்குழுவில் எமக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய மங்கள சமரவீர எம்.பி:- அரசியல் அமைப்பின் 48(2)க்கு அமைய அரசாங்கம் ஒன்று இல்லை எனக் குறிபிட்டார்.