ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத் திட்டங்களுக்கு அதிகசெலவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் இராஜினாமா செய்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவராக பதவிவகித்து வந்த எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரபூர்வ பயணங்களுக்காக கிட்டத்தட்ட 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், தனது மேற்பார்வையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பணத்தைத் தான் செலுத்தியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிக் சொல்ஹெய்மின் இராஜினாமாவை ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐ.நா. பேச்சாளர் ஸ்டெப்னி டஜாரிக் கூறியுள்ளார்.